Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தீர்மானம்

In இந்தியா
Updated: 08:03 GMT, Apr 4, 2017 | Published: 06:51 GMT, Apr 4, 2017 |
0 Comments
1185
This post was written by : Shailu

தென் மாநிலங்களில் நடைபெறும் லொறி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 6வது நாளை எட்டியுள்ள நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி முதல் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

லொறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதோடு, 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேங்கியுள்ளன. இது குறித்து மாநில லொறி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தமிழ்நாடு தலைவர் குமாரசாமி கருத்து தெரிவிக்கையில்,

“தமிழக அரசு சார்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், காப்புறுதி தொடர்பாக காப்புறுதி ஒழுங்கு முறை ஆணையம் நடத்திய பேச்சுவார்த்தையில் காப்பீட்டு கட்டணத்தை குறைக்காததால் சுமூக முடிவு ஏற்படவில்லை.

இதனால் 6 மாநிலங்களிலும் போராட்டம் தொடர்கின்ற நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி முதல் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் லொறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையிலேயே 8ஆம் திகதி போராட்டம் இடம்பெறவுள்ளது.

காப்புறுதி தொடர்பான பிரச்சினையில் மத்திய அரசு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்காவிட்டால் மேற்கூறப்பட்ட தினத்திலிருந்து நாடு முழுவதும் லொறிகள் இயக்கப்படாது. எனவே மத்திய அரசு இதில் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg