Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜோயலின் அடுத்த படைப்பாக ‘2050’

In
Updated: 10:01 GMT, Apr 5, 2017 | Published: 09:28 GMT, Apr 5, 2017 |
0 Comments
1907
This post was written by : Anojkiyan

மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு அடிப்படை தேவையாக அமையும் நீர், தற்போதைய சூழல் மாசடைவினால் எதிர்காலத்தில் இல்லாது போகும் என்பதை, உரக்கவும் கண்ணுக்கு விருந்தாகவும் படைத்துள்ளார் இயக்குநர் ஜோயல்.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த துடிக்கும் இயக்குநர் ஜோயலின் அடுத்த படைப்பாக வெளிவந்துள்ள ‘2050’ குறுந்திரைப்படம், நீரின் முக்கியத்துவத்தை 5 நிமிட காணொளியாக யதார்த்தமாக உணர்த்தியுள்ளது.

இக்குறுந்திரைப்படத்தில் உணர்ச்சிபூர்வமாக தம்மை வெளிக்காட்டியுள்ள அஜய் மற்றும் மனோவின் நடிப்பு பாராட்டத்தக்கது. மேலும் மனோஜிதன் மற்றும் ஜோயலின் ஒளிப்பதிவு, எதிர்வரும் 2050ஆண்டுகளுக்கு இயற்கையின் கோரத்தை கண் முன்னே நிறுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg