Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் கிளர்ச்சிப் பாதையில் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது: அநுரகுமார

In இலங்கை
Updated: 03:24 GMT, Apr 6, 2017 | Published: 03:24 GMT, Apr 6, 2017 |
0 Comments
1234
This post was written by : Ravivarman

நாட்டின் இன்றைய சூழ்நிலையில் மீண்டும் ஒரு கிளர்ச்சிப் பாதையில் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

46ஆவது ஏப்ரல் வீரர்கள் தினத்தை ஒட்டி மொனறாகலையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“இங்கு சாதாரணமான மக்களுக்கே சட்டம் சிறப்பாக செயற்படுகின்றது. சிறிய குற்றங்களுக்கெல்லாம் மக்கள் கடும் தண்டனைகளை அனுபவித்து வருகின்றனர். ஆனால் நாட்டில் பாரிய குற்றமிழைத்தவர்கள் வெளியில் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். மிகப் பெரிய ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

அரசாங்கம் அவர்களைக் கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை. இதனாலேயே இன்று நாமும் எமது சகோதரர்களின் கிளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது” என மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 1971ஆம் ஆண்டு கிளர்ச்சியின்போது உயிர்நீத்த மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து மொனறாகலை மற்றும் கேகாலை பிரதேசங்களில் நேற்றையதினம் அக் கட்சியினர் ஏப்ரல் வீரர்கள் தினத்தினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg