சுவீடன் லொறி தாக்குதல்: சந்தேகத்தின் பேரில் இருவர் கைது
சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் (Stockholm) நடத்தப்பட்ட லொறி தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இருவரில், ஒருவர் மீது தீவிரவாதத்துடன் தொடர்புடைய நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லொறி தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த சுவீடன் பிரதமர் ஸ்டெஃபன் லோவன் (Stefan Lofven), இது ஒரு தீவிரவாதத் தாக்குதல் என தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, சுவீடனில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஸ்டோக்ஹோமில் உள்ள பல்பொருள் அங்காடியின் மீது, வேகமாக வந்த லொறி ஏற்படுத்திய இத் தாக்குதலில், குறைந்தது நால்வர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.