Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரிய குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து இனிமேல் பேச முடியாது! – ஹிலரி கிளிண்டன்

In
Updated: 05:15 GMT, Apr 9, 2017 | Published: 04:36 GMT, Apr 9, 2017 |
0 Comments
1746
This post was written by : Anojkiyan

சிரியா மீதான அமெரிக்காவின் பதில் தாக்குதலால், சிரிய குழந்தைகளை பாதுகாப்பதாக நம்மால் இனி பேச முடியாது என முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலரி கிளிண்டன் கூறியுள்ளார்.

சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் சிரியா நாட்டு விமானப்படை தளத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே ஹிலரி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, அடுத்ததாக அவர்களுக்கான அமெரிக்காவின் கதவு மூடப்படும் என்பதை அமெரிக்க நிர்வாகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள ஹான் செய்கூன் நகரில் சிரியாவின் விமானப்படையினால் நடத்தப்பட்டதாக கூறப்படும் இரசாயண தாக்குதலில், குழந்தைகள் உட்பட 70இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) சிரியா நாட்டு விமானப்படை தளத்தின்மீது, அமெரிக்கா  ஏவுகணைக தாக்குதல் நடத்தியது. இத் தாக்குதலுக்கு உலகில் உள்ள பல முக்கிய நாடுகளும் கண்டனம் வெளியிட்டுவரும் நிலையில், தற்போது ஹிலரியும் தனது கண்டத்தை வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg