Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனா செல்ல தயாராகிறார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

In
Updated: 06:35 GMT, Apr 9, 2017 | Published: 05:02 GMT, Apr 9, 2017 |
0 Comments
1323
This post was written by : Anojkiyan

அமெரிக்காவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனா செல்லவுள்ளார். இதனை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெஸ் டில்லர்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், இருநாட்டு தலைவர்களுக்கும் இடையேயான பேச்சு நல்லமுறையில், நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்ததென தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர், இப் பேச்சுவார்த்தையின் போது வர்த்தகம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.

அத்தோடு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவுடன் நீண்டகால நல்லுறவை கொண்டிருக்க விரும்புவதாக தெரிவித்ததாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெஸ் டில்லர்சன் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg