Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவின் அரசியலை சகல நாடுகளும் நிராகரிக்க வேண்டும்: ஈரான் ஜனாதிபதி

In
Updated: 06:38 GMT, Apr 9, 2017 | Published: 05:55 GMT, Apr 9, 2017 |
0 Comments
1475
This post was written by : Anojkiyan

சிரிய போரில் அமெரிக்கா நடத்திவரும் அரசியலை, சகல நாடுகளும் நிராகரிக்க வேண்டும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இரசாயன தாக்குலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிரிய நாட்டு விமானப்படை தளத்தின்மீது அமெரிக்கா நடத்திய பதில் தாக்குதலின் பின்னணியில், அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

“சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயனத் தாக்குதல் குறித்து உரிய விசாரணை வேண்டும். குறிப்பாக இரசாயன குண்டுகள் எங்கிருந்து வந்தன என்பது தொடர்பான விபரங்களை அறிய வேண்டும்.

அமெரிக்கா நடத்தி வரும் ஏவுகணை தாக்குதல் பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு அச்சுறுத்தலானது. இத்தகைய அரசியலை உலகம் முழுவதுமுள்ள சகல நாடுகளும் நிராகரிக்க வேண்டும்” என கூறினார்.

ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷைராத் விமானப்படை தளத்தின்மீது அமெரிக்க போர் விமானங்கள் 59 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் சிரியாவின் விமானப்படைத் தளம், போர் விமானங்கள் மற்றும் அங்கிருந்த பெற்றோல் நிரப்புமிடம் உள்ளிட்டவை தீக்கிரையாகின. அங்கிருந்த ஏராளமான வீரர்களும் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு சிரியாவின் முக்கிய ஆதரவுக் கரங்களான ரஷ்யா, பொலிவியா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அந்த வரிசையில் தற்போது சிரியாவின் மிக நெருங்கிய நட்பு நாடான ஈரானும் இணைந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg