Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓரினச்சேர்க்கை தம்பதியினர் தாக்கப்பட்டமைக்கு எதிராக நெதர்லாந்தில் ஆர்ப்பாட்டம்

In ஐரோப்பா
Updated: 08:58 GMT, Apr 9, 2017 | Published: 08:18 GMT, Apr 9, 2017 |
0 Comments
1400
icon_com
This post was written by : Sylviya
10

நெதர்லாந்தில் கைகோர்த்தவாறு வீதியில் சென்ற ஓரினச்சேர்க்கை தம்பதியினர் கடுமையாக தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெதர்லாந்தின் பல பாகங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நெதர்லாந்தின் Arnhem,  Hague  மற்றும் Eindhoven ஆகிய பகுதிகளில் இவ் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. Arnhem பகுதியிலேயே குறித்த ஓரினச்சேர்க்கை தம்பதியினர்  தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Arnhem பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் 2500 ஆர்ப்பாட்டப்பாரர்கள் கலந்துகொண்டதாகவும் அவர்கள் வானவில்லின் நிறத்தில் அமையப்பெற்ற கொடிகளை கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையாக தாக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை தம்பதியும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவர் கருத்து தெரிவித்த போது, “எமக்கு நேர்ந்த கொடுமைக்கு நியாயம் கோரி இது போன்ற தருணங்களில் எமக்கு ஆதரவாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.

10 - 1
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg