Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொரிய தீபகற்பத்திற்கு விரையும் அமெரிக்க போர்க் கப்பல்கள்

In
Updated: 08:41 GMT, Apr 9, 2017 | Published: 08:41 GMT, Apr 9, 2017 |
0 Comments
2191
This post was written by : Anojkiyan

கொரிய தீபகற்பத்தில் சர்ச்சைக்குரிய நாடாக விளங்கும் வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, கொரிய தீப கற்ப பகுதிக்கு அமெரிக்க போர்க் கப்பல்கள் விரைந்துள்ளன.

வடகொரியாவின் அணுஆயுத மிரட்டலை சீனாவின் துணையோடு அல்லது அமெரிக்கா தனியாக சமாளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்ததன் பின்னணியில், குறித்த போர்க்கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் நங்கூரமிட புறப்பட்டுள்ளன.

‘கார்ல் வின்சன்’ என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை கொரிய தீப கற்ப பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளதாகவும், அதற்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மேலும் 2 போர்க் கப்பல்கள் சென்றுள்ளதாகவும் அமெரிக்க இராணுவ செய்தி தொடர்பாளரான டேவ் பென்ஹாம் தெரிவித்துள்ளார்.

சிரியா மீது அதிரடி தாக்குதல் நடத்திய அமெரிக்கா, தற்போது கொரிய தீபகற்ப பகுதிக்கு புறப்பட்டுள்ளதால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg