Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு கௌரவிப்பு

In இலங்கை
Updated: 16:52 GMT, Apr 10, 2017 | Published: 16:50 GMT, Apr 10, 2017 |
0 Comments
1207
This post was written by : Vithushagan

யாழில் பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச்செல்லும் வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரை கௌரவிக்கும் வகையில் அணிவகுப்பு மரியாதை இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது.

யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தலைமையில் யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த பொலிஸார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர், யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண மற்றும் யாழ்.பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் ஆகியோர் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவித்தனர்

இதேவேளை பொலிஸ் சேவையில் கடந்த 38 வருடங்களாக கடமையாற்றிய தற்போதைய வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் சரத்குமார, கம்பஹா மற்றும் கேகாலை, வயம்பு உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_0872 IMG_0876 IMG_0883

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg