Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவதூறு வழக்கு: கெஜ்ரிவாலை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

In இந்தியா
Updated: 10:36 GMT, Apr 11, 2017 | Published: 09:31 GMT, Apr 11, 2017 |
0 Comments
1202
This post was written by : Shailu

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகைமைகள் குறித்து விமர்சித்தமை தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய  டுவிட்டர் பக்கத்தில்,  பிரதமர் மோடி 12ஆம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்றும் அவரது பட்டப்படிப்பு போலியானது என்றும் கூறியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg