Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பங்குனித் திங்கள் உற்சவம்

In இலங்கை
Updated: 09:33 GMT, Apr 11, 2017 | Published: 08:27 GMT, Apr 11, 2017 |
0 Comments
1086
This post was written by : Anojkiyan
god

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில், பங்குனித் திங்கள் உற்சவத்தை முன்னிட்டு விஷேட பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்மனுக்கு விஷேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன. பங்குனித் திங்கள் தினத்தை முன்னிட்டு பெண்களால் கண்ணகி அம்மனை நோக்கி விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

இந்நாளில் பக்தர்கள் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு தமது நேர்த்திக் கடன்களைச் செலுத்துவர். இதனால் கண்ணகை அம்மன் ஆலயங்களில் பங்குனித் திங்களில் பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் வற்றாப்பளையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்குனித் திங்கள் பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். நேற்றைய தினம் பௌர்ணமி தினம் என்பதால், அதிகமான பக்தர்கள் ஆலயத்தில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.