Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிலியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையில் மோதல்

In
Updated: 10:08 GMT, Apr 12, 2017 | Published: 10:08 GMT, Apr 12, 2017 |
0 Comments
1253
This post was written by : Elakkiya

கல்விச்செலவீன அதிகரிப்பிற்கு எதிராக சிலியின் தலைநகர் சான்டியாகோவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக உருவெடுத்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பாடசாலை சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடி நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும் கறுப்புநிற உடைகளை அணிந்திருந்ததுடன் பொலிஸ் வாகனத்தின் மீது கற்களையும் தடிகளையும் வீசி வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.

சிலியில், கல்விக்கான அதிகரித்த செலவீனம் மற்றும் கல்வித் துறையில் தனியாரின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்யும் சீர்திருத்தத்திற்கு எதிராகவும் கடந்த சில ஆண்டுகளாக எதிர்ப்புக்கள் வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg