Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மதுபானக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க சார்பில் போராட்டம்: தமிழிசை அறிவிப்பு

In இந்தியா
Updated: 04:54 GMT, Apr 13, 2017 | Published: 04:54 GMT, Apr 13, 2017 |
0 Comments
1447
This post was written by : Shailu

தமிழகம் முழுவதும் உள்ள மதுபானக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 18ஆம் திகதி பா.ஜ.க சார்பில் போராட்டம் ஒன்று முன்னெக்கப்படவுள்ளதாக தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் டொக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் மதுபான கடைகளை மூடக்கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், பொதுமக்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழிசை மேற்குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் மீது பொலிஸ் அதிகாரி பாண்டியராஜன் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் பல பெண்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி பாண்டியராஜனை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். அத்தோடு தாக்கப்பட்ட பெண்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பும் கோர வேண்டும்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் கைது செய்யபட்டு நிலையில், அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும்.

இனி மதுக்கடைகளை திறக்க முடியாத அளவிற்கு பா.ஜனதா மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg