Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

கேப்பாபிலவு மக்களுடன் இராணுவத்தினர் புத்தாண்டு கொண்டாட்டம்

In இலங்கை
Published: 07:07 GMT, Apr 14, 2017 |
0 Comments
1387
This post was written by : Ravivarman

முல்லைத்தீவில் கேப்பாபிலவில் தமது பூர்வீகக் காணிகளை மீட்கப் போராடிவரும் மக்களுடன் இராணுவத்தினர் இன்று(வெள்ளிக்கிழமை) புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.

இராணுவத் தலைமையகம் முன்பாக இம் மக்கள் கடந்த மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த போராட்டமானது இன்று 55ஆவது நாளாகவும் தீர்வுகள் எதுவும் கிடைக்காத நிலையில் தொடர்கின்றது.

இந்த நிலையில் இராணுவத் தலைமையகம் முன்பாக கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை இராணுவத்தினர் சென்று சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் பண்டிகைத் திண்பண்டங்களையும் மக்களுக்கு வழங்கியுள்ளனர்.

எனினும் தாம் புத்தாண்டை கொண்டாடும் மனநிலையில் இல்லை எனத் தெரிவித்துள்ள கேப்பாபிலவு மக்கள் தமது சொந்தக் காணிகளுக்கு செல்லும் நாளுக்காக தாம் காத்திருப்பதாகவும், தமது காணிகளை விட்டு வெளியேறி தம்மை தமது சொந்த நிலத்தில் வாழ விடுமாறும் இராணுவத்திடம் கேட்டுக்கொண்டனர்.

kep1

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.