Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்கள் மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது: பொன்.இராதாகிருஷ்ணன்

In இந்தியா
Updated: 11:01 GMT, Apr 14, 2017 | Published: 11:01 GMT, Apr 14, 2017 |
0 Comments
1214
This post was written by : Surenth

திருப்பூரில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது பெண்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாகுதலுக்கு கண்டனத்தை வெளியிட்டதுடன் இது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

திருப்பூர் அருகே சாமளாபுரம் பகுதியில் மதுக் கடைகளை மூடுமாறு வலியுறுத்து பெண்கள் முன்னெடுத்த போராட்டம் அவர்களின் உரிமையாக நாம் பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவமானது, கவலையளிப்பதாக உள்ளது எனவும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து அவதானமாக இருக்கும் என்றும் பெண்கள் மீது அதிக அக்கறையுடன் செயற்படும் என்றும் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg