Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அ.தி.மு.க.வில் உள்ள குடும்ப ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும்: மா.பாண்டியராஜன்

In இந்தியா
Updated: 11:13 GMT, Apr 14, 2017 | Published: 11:13 GMT, Apr 14, 2017 |
0 Comments
1128
This post was written by : Surenth

அ.தி.மு.க.வில் உள்ள குடும்ப ஆதிக்கத்தை ஒழித்து மீண்டும் இரு அணிகளும் இணைந்து வெற்றி பெற வேண்டும் என பன்னீர்செல்வம் அணியின் முன்னாள் அமைச்சர் மா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, ஆவடியை அடுத்த திருமுல்லைவாசலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் நடந்து கொண்டமை ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை எனவும் அவர் அதிகாரிகளுடன் பிரச்சினையில் ஈடுபட்டமை கடுமையான குற்றமாகும் எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

மேலும், வறட்சி காரணமாக உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு தமிழக அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசு பலவீனமாக இருப்பதாக பொதுமக்கள் நினைப்பதாகவும் மா.பாண்டியராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg