Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட இருவர் மீது வருமான வரித்துறை மீண்டும் விசாரணை

In இந்தியா
Updated: 04:21 GMT, Apr 15, 2017 | Published: 04:21 GMT, Apr 15, 2017 |
0 Comments
1306
This post was written by : Surenth

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டொக்டர் கீதாலட்சுமி ஆகியோரை, எதிர்வரும் திங்கட்கிழமை வருமான வரித்துறை விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம் குறித்து நடந்த விசாரணையில், சந்தேகம் எழுவதால் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

கடந்த விசாரணையின் போது, வழங்கப்பட்ட வாக்குமூலம் குறித்து இந்த விசாரணையில் அதிக கவனம் செலுத்தப்படும் என வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பணியாளர்கள் நியமனம் மற்றும் மருந்து பொருட்கள் வாங்கும் போது இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றன.

இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் இருவரிடமும் தனித்தனியாக, விசாரணைகள் நடத்தப்படும் எனவும் விசாரணையின் போது பல திருப்பு முனைகள் இருக்கும் எனவும் வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg