Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாம் பயணம்

In இலங்கை
Published: 03:17 GMT, Apr 16, 2017 |
0 Comments
1225
icon_com
This post was written by : Ravivarman
Ranil-Wickremesinghe

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

வியட்நாம் பிரதமர் ன்குயென் க்ஷூவன் ஃபுக் விடுத்துள்ள அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு செல்லும் பிரதமர் ரணில், அவரது பாரியாருடன் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் வியட்நாமில் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்தின்போது, வியட்நாம் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்துபேச்சுவார்த்தைகளை நடத்த உள்ள பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, பொருளாதார, கைத்தொழில்துறைகளில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர்களான மஹிந்த அமரவீர, ஹரீன் பெர்னாண்டோ, மனோ கணேசன் உள்ளிட்டவர்களும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg