Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி

In கிாிக்கட்
Updated: 04:02 GMT, Apr 16, 2017 | Published: 04:02 GMT, Apr 16, 2017 |
0 Comments
1294
This post was written by : Surenth

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கும் இடையிலான போட்டியில் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் உத்தப்பாவின் அதிரடி ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 172 ஓட்டங்களை பெற்றது.

கொல்கத்தா அணி சார்பில், உத்தப்பா 68 ஓட்டங்களையும் மணீஷ் பாண்டே 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

173 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 155 ஓட்டங்களை பெற்று 17 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக கொல்கத்தா அணியின் உத்தப்பா தெரிவு செய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg