Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனை தோல்வி: தென்கொரியா-அமெரிக்கா தகவல்

In
Published: 03:55 GMT, Apr 16, 2017 |
0 Comments
1609
This post was written by : Anojkiyan

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் வடகொரியா மேற்கொண்ட புதிய ஏவுகணை சோதனை, தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதனை அமெரிக்க இராணுவமும் உறுதிசெய்துள்ளது.

அவ்வப்போது  அணு ஆயுத சோதனை செய்து மிரட்டி வரும் வடகொரியா இன்று தென் ஹாம்கோயிங் மாகாணத்தில் உள்ள சின்போ பகுதியில் இருந்து மேற்குறித்த ஏவுகணையை விண்ணில் ஏவி சோதனை செய்துள்ளது.

ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஏவுகணை சில வினாடிகளில் வெடித்து சிதறிவிட்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

இருப்பினும், பயன்படுத்தப்பட்ட ஏவுகணை என்ன வகை என்பதை தென் கொரிய மற்றும் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு செய்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், 1000 கி.மீட்டர் (620 மைல்) தூரம் பாய்ந்து சென்று தாக்க கூடிய 4க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை, ஐப்பான் கடல்பகுதியில் வீசி வடகொரியா சோதனை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg