Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிராக புதுக்கோட்டையில் போராட்டம் முன்னெடுப்பு

In இந்தியா
Published: 06:33 GMT, Apr 16, 2017 |
0 Comments
1156
icon_com
This post was written by : Shailu
Hydrocarbon

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நேற்று (சனிக்கிழமை) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது, நேற்றுடன் 4வது நாளை எட்டியுள்ள நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அத்தோடு, மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பி தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உட்பட நாடு முழுவதிலும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை, ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் குறித்த திட்டம் கைவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனம் மீண்டும் அதற்கான பணிகளைத் ஆரம்பிக்க முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg