Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அமெரிக்காவின் தாக்குதலில் ஆப்கானில் உயிரிழந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை 94ஆக உயர்வு

In
Published: 06:32 GMT, Apr 16, 2017 |
0 Comments
1400
icon_com
This post was written by : Anojkiyan
att

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை, 94ஆக அதிகரித்துள்ளதாக நன்கர்ஹர் மாகாண ஆளுனரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக இருந்த நிலையில், நேற்றைய தினம் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது குறித்து நன்கர்ஹர் மாகாண ஆளுனரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

“ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலில் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை” என கூறினார்.

கிழக்கு ஆப்கானிஸ்தான், நங்கர் கார் மாகாணத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அச்சின் மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது ‘அனைத்து வெடிகுண்டுகளின் தாய்’ என்று கூறப்படும் மிகப்பெரிய குண்டை அமெரிக்க விமானம் வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் பதுங்குமிடம் மற்றும் சுரங்க வளாகம் அழிக்கப்பட்டது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg