Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பெண்களே பிரகாசிப்பார்கள்: ஷிப்லி பாறூக்

In இலங்கை
Updated: 06:44 GMT, Apr 16, 2017 | Published: 06:44 GMT, Apr 16, 2017 |
0 Comments
1315
This post was written by : Ravivarman

“தற்போதைய கல்வி அடைவு மட்டமும் அதில் பெண்கள் காட்டுகின்ற அபார ஈடுபாட்டையும் ஆராய்கின்ற போது எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பெண்களே பிரகாசிப்பார்கள் என்பது உறுதி” என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

காத்தான்குடி அஷ்ஹதா பாடசாலைக்கு தனது சொந்த நிதியிலிருந்து 10 மின் விசிறிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றையதினம் (சனிக்கிழமை) இடம்பெற்றபோது, பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த சிலகாலமாக பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் ஆண் மாணவர்களின் எண்ணிக்கையின் வீதம் தொடர்ச்சியாக குறைவடைந்து வருவதைப் புள்ளி விவரங்களைக் கொண்டு அவதானிக்க முடிகின்றது. இது இலங்கையிலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்கள் மத்தியில் காணப்படும் பொதுவான மாற்றமாக உள்ளது.

அனைத்து சமூகங்களிலுமுள்ள ஆண் மாணவர்களுக்கும் முறையான கல்வியிலுள்ள ஆர்வம் குறைந்து கொண்டே செல்கின்றது. இவ்வாறான நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் பெண்கள் மாத்திரமே கடமையாற்றக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகும்.

அவ்வாறு நிகழும்போது அது சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும். எனவே எதிர்காலத்தை நோக்கியதாக சிறந்ததொரு சமூகம் ஒன்றை உருவாக்குவதற்காக கல்வித்துறையில் சமத்துவமாக ஆண்களும் பெண்களும் மேம்பாடு அடைய வேண்டும்” என ஷிப்லி பாறூக் மேலும் தெரிவித்தார்.

1 2 3

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg