Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இரசாயன தாக்குதலை இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும்: சிரியாவுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை

In ஐரோப்பா
Published: 07:11 GMT, Apr 16, 2017 |
0 Comments
1104
icon_com
This post was written by : Anojkiyan
France's Foreign Minister Jean-Marc Ayrault arrives to attend a bilateral meeting during a G7 for foreign ministers in Lucca

இரசாயன தாக்குதல் போல தாக்குதலை இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும் என சிரியாவுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சர் அய்ரால்ட் கூறுகையில், ‘சிரியா வெறுப்பு மனப்பான்மையில் இரசாயன தாக்குதலை நடத்தி விட்டு இப்போது பொய் சொல்கிறது.
இது போல யுத்தத்தை தாக்குதலை இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையெனில் கடுமையான பின்விளைவுகளை சந்திக் நேரிடும்’ என எச்சரித்துள்ளார்.

இந்த மாத ஆரம்பத்தில் சிரிய அரசு படையினரால் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும், இரசாயன குண்டுதாக்குதலில் குழந்தைகள் உட்பட 54 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

ஆனால், இதுவரை இத்தாக்குதலை யார் நடத்தியது என்பது உறுதியாக தெரியவில்லை. அமெரிக்கா மற்றும் ஐ.நா இத்தாக்குதலை சிரியா தான் நடத்தியதாக கூறிவருகின்றது. இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கெதிரான தாக்குதலில் அமெரிக்காவின் கூட்டுப்படையுடன் கைகோர்த்திருக்கும் பிரான்ஸூம் சிரியாவை குற்றஞ்சுமத்தியுள்ளது.

அதேவேளை இத்தாக்குதலை சிரியா நடத்தவில்லை என சிரிய ஜனாதிபதிக்கு ஆதரவாக குரல் கெடுத்துவரும் ரஷ்யாவும் ஈரானும் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg