Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஆசிய மேசைப் பந்து போட்டி தொடரில் இருந்து இந்தியா வீரர் வெளியேற்றப்பட்டார்

In விளையாட்டு
Updated: 08:11 GMT, Apr 16, 2017 | Published: 08:08 GMT, Apr 16, 2017 |
0 Comments
1192
icon_com
This post was written by : Surenth
19th Commonwealth Games - Day 9: Table Tennis

ஆசிய மேசைப் பந்து போட்டியின் காலிறுதிக்கு முதல் போட்டியில் இந்தியாவின் சரத் கமல் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) சீனாவின் ஊக்ஸி நகரில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் சரத் கமல் 6-11, 11-9, 9-11, 14-12, 10-12 என்ற செட் கணக்கில் ஹொங்காங்கின் லாம் சியூ ஹாங்கியிடம் தோல்வியடைந்தார்.

முதல் செட்டை இழந்தபோதும், 2ஆவது செட்டில் அபாரமாக விளையாடிய சரத் கமல் செட்டை 11-9 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

3ஆவது செட்டை சியூ ஹாங்கும், 4ஆவது செட்டை சரத் கமலும் மாறி மாறி கைப்பற்ற, 5ஆவது செட்டில் சியூ ஹாங் 12-10 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம் வெற்றியை பதிவு செய்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg