Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

முதலையிடம் அகப்பட்ட மீனவர் வைத்தியசாலையில் அனுமதி

In இலங்கை
Updated: 07:50 GMT, Apr 16, 2017 | Published: 07:37 GMT, Apr 16, 2017 |
0 Comments
1325
icon_com
This post was written by : Ravivarman
1 (1)

மட்டக்களப்பு வாவியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் இராட்சத முதலையினால் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை (ஞாயிற்றுக்கிழமை)  இடம்பெற்ற இச்சம்பவத்தில் துறைநீலாவணை 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 35 வயதுடைய தெய்வநாயகம் காண்டீபன் என்பவரே மயிரிழையில் முதலையின் பிடியிலிருந்து உயிர் தப்பியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை 2 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது சுமார் 14 அடி நீளமான முதலை அவரது தோணியின் கீழ்ப்பகுதியை உடைத்து குறித்த மீனவரைத் தாக்கியுள்ளது.

இதன்போது அருகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் சத்தம் கேட்டு மீனவரைக் காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg