Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நாடு முழுவதும் பா.ஜ.க முதல்வர்களின் ஆட்சி நிலவ வேண்டும்: அமித் ஷா

In இந்தியா
Published: 07:49 GMT, Apr 16, 2017 |
0 Comments
1209
icon_com
This post was written by : Shailu
amith-shah

நாடு முழுவதும் பா.ஜ.க முதல்வர்களின் ஆட்சி நிலவ வேண்டும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க-வின் இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம், ஒடிஸா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள ஜனதா மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை நடைபெற்றது.

இதில் பிரதமர் மோடி, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் இக்கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர். கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே ரவிசங்கர் பிரசாத் இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி தொடர்ந்து பா.ஜ.க உச்ச நிலையை அடைந்துவிட்டது என்று பலரும் கூறிவந்தார்கள். ஆனால், பா.ஜ.க இன்னமும் உச்ச நிலையை அடையவில்லை என்று அமித் ஷா கூறியுள்ளார்.

அத்தோடு, உள்ளூராட்சி அமைப்புகள் முதல் நாடாளுமன்றம் வரை ஆட்சி நிர்வாகத்தில் அனைத்து நிலைகளிலும் பா.ஜ.க பிரதிநிதித்துவம் பெற வேண்டும். நாடு முழுவதும் பா.ஜ.க முதல்வர்களின் ஆட்சி அமைய வேண்டும். இந்த இலக்குகளை எட்டும் வரை பா.ஜ.க தொண்டர்கள் ஓயக்கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒடிஸா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியமைப்பதே பா.ஜ.க.வின் இலக்காகும் என்று குறிபிட்ட அமித் ஷா, எதிர்காலத்தில் தமிழகம், கேரளத்திலும் ஆட்சியமைக்க பா.ஜ.க முனைப்புடன் செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார்’ என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg