Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘மாருதா’ புயலானது இன்று கரையை கடக்கும்: தேசிய பேரிடர் மேலாண் ஆணையம் தகவல்

In இந்தியா
Updated: 08:08 GMT, Apr 16, 2017 | Published: 08:08 GMT, Apr 16, 2017 |
0 Comments
1255
This post was written by : Shailu

வங்க கடலில் மையம் கொண்டுள்ள ‘மாருதா’ புயல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவில் கரையை கடக்கும் என தேசிய பேரிடர் மேலாண் ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘மாருதா புயலானது வட கிழக்காக நகர்ந்து மியான்மர் கடற்கரை அருகேயுள்ள சண்டோவே பகுதியில் கரையை கடக்கவுள்ளது

இன்னும் 24 மணித்தியளங்களுக்கு வங்ககடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், மீனவர்கள் யாரும் குறித்த பகுதிக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது.

அந்தவகையில், 45 முதல் 65 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீவுவதோடு, அந்தமான் வங்க கடலோர பகுதிகளில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த புயலின் தாக்கமானது, சென்னை, நாகை, கடலூர், பாம்பன் பகுதிகளில் காணப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg