Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

19ஆம் நூற்றாண்டில் பிறந்த உலகின் வயதான பெண்மணி காலமானார்!

In ஐரோப்பா
Updated: 08:57 GMT, Apr 16, 2017 | Published: 08:57 GMT, Apr 16, 2017 |
0 Comments
1150
This post was written by : Anojkiyan

உலகின் வயதான பெண்மணியாக கருதப்பட்ட இத்தாலி நாட்டை சேர்ந்த எம்மா மொரனோ, தனது 117வது வயதில் நேற்று (சனிக்கிழமை) காலமானார்.

1899ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி பிறந்த இவர், தன் வாழ்நாளில் இரண்டு உலகப் போர்களையும் பார்த்த பெருமையை பெற்றவர்.

19ஆம் நூற்றாண்டில் பிறந்து, உயிர் வாழ்ந்த கடைசி நபராக இருந்த இவரின் இழப்பு அனைவரினதும் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கடந்த தனது பிறந்த நாளின் போது தன்னைப்பற்றி எம்மா கூறுகையில்,

“என்னுடைய வாழ்க்கை மிகவும் அற்புதமானது. நான் என்னுடைய 65வது வயது வரை ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தேன். நான் 26 வயதாக இருந்த போது ஒருவன் என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். எங்களுக்கு 1937ஆம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்தது. அது பிறந்து 6 மாதங்களுக்குள் இறந்து விட்டது.

பின்னர் என்னுடைய கணவனை நான் அடித்து வெளியே அனுப்பி விட்டேன். இத்தாலியில் அதுவே முதல் சம்பவமாக இருந்தது. பல ஆண்டுகளாகவே தனியாக வாழ்ந்து வருகிறேன். நான் யாரையும் அழைப்பதில்லை என்றாலும், அமெரிக்கா, சுவிஸ்சர்லாந்து போன்ற நாடுகளிலும் இருந்து என்னைப் பார்க்க நிறைய பேர் வருகிறார்கள்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg