Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நானுஓயாவில் மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

In இலங்கை
Published: 08:51 GMT, Apr 16, 2017 |
0 Comments
1209
icon_com
This post was written by : Ravivarman

நானுஓயா டெஸ்போட் மேற்பிரிவு தோட்டத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய இராமஜெயம் சிவகனம் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

குறித்த தோட்டத்தில் நேற்றையதினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற ஆலய திருவிழாவில் கலந்து கொண்ட பின் தனது நண்பருடன் பயணித்தபோதே மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இன்னுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC02432 DSC02433

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg