Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஹெட்ரிக் தோல்வியை தவிர்க்க புனே அணியுடன் மோதும் பெங்களூர் அணி

In கிாிக்கட்
Updated: 11:23 GMT, Apr 16, 2017 | Published: 09:28 GMT, Apr 16, 2017 |
0 Comments
1228
icon_com
This post was written by : Surenth
Rising Pune Supergiants vs Royal Challengers Bangalore

ஐ.பி.எல் தொடரின் 12 ஆவது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) 17ஆவது போட்டிபெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இரவு எட்டு மணிக்கு நடைபெற உள்ளது.

இன்றைய இந்த இரண்டாவது போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங்புனே சுப்பர் ஜெய்ன்ட் அணியும் மோதுகின்றன.

பெங்களூர் அணி முதலாவது போட்டியில் ஐதராபாத் அணியிடம் தோல்வியை தழுவியது. இரண்டாவது போட்டியில் டெல்லி அணியை வெற்றி கொண்டது.

மூன்றாவது போட்டியில் பஞ்சாப் அணியிடம் தோற்றது. நான்காவது போட்டியில் மும்பை அணியிடம் தோற்றுள்ளது. இந்த நிலையில், பெங்களூர் அணி தனது ஹெட்ரிக் தோல்வியை தவிர்த்துக் கொள்ள முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புனே அணி, முதல் போட்டியில் மும்பை அணியிடம் வெற்றி கொண்டது. இதையடுத்து, பஞ்சாப், டெல்லி, குஜராத் ஆகிய அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளது.

எனவே தொடர்ச்சியான தனது தோல்விக்கு புனே அணி முற்றுப்புள்ளி வைக்க போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg