Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டென்னிஸ் வாழ்க்கையில் முக்கியமான வருடம் இந்த வருடம்: சானியா

In டெனிஸ்
Updated: 10:17 GMT, Apr 16, 2017 | Published: 10:06 GMT, Apr 16, 2017 |
0 Comments
1489
This post was written by : Surenth

டென்னிஸ் வாழ்க்கையில் இந்த வருடம் மிகவும் முக்கியமான வருடமாக அமையும் என இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த வருடம் கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்றில் விளையாடி உள்ளேன். பிரிஸ்பேன் போட்டியில் சம்பியன் பட்டம் வென்றுவிட்டேன்.

இதுதவிர மியாமி, சிட்னி போட்டிகளில் இறுதிச்சுற்று வரையும், வேறு சில போட்டிகளில் அரையிறுதி வரையும் முன்னேறி இருந்தேன்.

எல்லா போட்டிகளிலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும். அத்துடன் ஏராளமான பட்டங்களை வெல்ல முடியும் என நான் நம்புகிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg