Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனேடிய வங்கியின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய பணத்தாள் அறிமுகம்

In கனடா
Updated: 10:35 GMT, Apr 16, 2017 | Published: 10:35 GMT, Apr 16, 2017 |
0 Comments
1146
This post was written by : Anojkiyan

கனேடிய வங்கி கூட்டமைப்பின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 10 டொலர் பணத்தாளை கனேடிய வங்கி அறிமுகம் செய்துள்ளது.

ஜூன் மாதம் 1ஆம் திகதி புலக்கத்துக்கு வரும் குறித்த பணத்தாள் அண்மையில் கனடா வங்கியின் ஆளுனர் ஸ்ரிபன் பொலொஸ், ஜினெட் பெற்றிபஸ் ரெய்லர் மற்றும் நிதி அமைச்சரின் நாடாளுமன்ற காரியதரிசி ஆகியோரினால் வங்கியின் தலைமை காரியாலயத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு கனேடியரும் ஆளிற்கொன்று என்று விகிதத்தில் மொத்தமாக 40 மில்லியன் தாள்கள் அச்சிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாளின் முகப்பு பகுதியில் கனேடாவின் முதல் பிரதமர் ஜோன் எ.மக்டொனால்ட் மற்றும் கூட்டமைப்பின் தந்தை ஜோர்ஜ் எடினே, கனடாவின் முதல் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் அக்னெஸ் மக்பெயில் மற்றும் ஜேம்ஸ் கிளாட்ஸ்ரோன் கனடாவின் முதலாவது செனட்டர்-ஒப்பந்த முதல்தேச கைன் ட்ரிப் ஆகியோரின் உருவப்படங்களை அச்சிடப்பட்டுள்ளன.

தாளின் பின்புறம் பொது மக்களின் கருத்துக்கள் அடிப்படையில் கனேடியர்கள் தாளில் என்ன விரும்புகின்றனர் என்பதை பொறுத்து கனேடிய காட்சி வரிசைகள் இடம்பெறும் எனவும் குறித்த பணத்தாளில் சில பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெறும் எனவும் கனடா வங்கி தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg