Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இலங்கை மாணவர்களுக்கு புதிய கற்கை நெறிகளை ஆரம்பிக்கும் La Trobe பல்கலைக்கழகம்

In வணிகம்
Updated: 11:29 GMT, Apr 16, 2017 | Published: 11:28 GMT, Apr 16, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Anojkiyan
save

இலங்கை, நேபாளம் மற்றும் இந்திய மாணவர்களுக்கு புதிய கற்கை நெறிகளை பெற்றுக்கொடுக்க அவுஸ்திரேலியாவின் La Trobe பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது.

சார்க் நாடுகள் மற்றும் இலங்கையில் மாணவர்களிடமிருந்து கிடைத்திருந்த வரவேற்பைத் தொடர்ந்து, La Trobe Business School இனால் புதிய ஆட்சேர்ப்பு செயற்பாடுகள் நவம்பர் மாதத்தில் ஆரம்பமாகவுள்ளன. பெப்ரவரி மற்றும் ஜுலை மாதத்தில் இரு செமிஸ்டர்கள் ஆரம்பமாகவுள்ளன. La Trobe Business School சில ஆண்டுகளுக்கு முன்னதாக அதன் பட்டப்படிப்பு கற்கைகளுக்கு மூன்றாவது செமிஸ்டரை அறிமுகம் செய்திருந்தது.

இந்த கற்கை தற்போது இலங்கை மாணவர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றுள்ளது. மேலும், துறையின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய கற்கைகளும் ஆரம்பமாகியுள்ளன.

புதிய புலமைப்பரிசில்கள் அறிவிப்பு 2017இல் ஆரம்பமாகவும் அவுஸ்திரேலியாவின் La Trobe Business School இனால் முன்னெடுக்கப்படும் கற்கைகளுக்கு மொத்த கற்கைநெறி கட்டணத்தில் 15 சதவிகிதம், 20 சதவிகிதம் மற்றும் 25 சதவிகிதம் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இந்த புலமைப்பரிசில்கள் மாணவர்களின் திறமைகள் அடிப்படையிலும், முன்னுரிமை அடிப்படையிலும் வழங்கப்படும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg