Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

எதிர்பார்ப்புக்கு அமையவே கருத்துக்கணிப்பின் முடிவுகள் அமையும்: தையீப் எர்டோகன் நம்பிக்கை

In ஐரோப்பா
Updated: 14:57 GMT, Apr 16, 2017 | Published: 11:10 GMT, Apr 16, 2017 |
0 Comments
1266
icon_com
This post was written by : Sylviya
16

துருக்கியின் அரசியலமைப்பை மாற்றுவது தொடர்பான கருத்துக்கணிப்பு இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வரும் நிலையில், அரசியலமைப்பை மாற்றவேண்டும் எனும் சாதகமான முடிவே கிடைக்கும் என துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

குறித்த கருத்துக்கணிப்பிற்கு தனது துணைவியுடன் வருகை தந்து வாக்களித்ததன் பின்னர், அங்கிருந்த ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “துருக்கியின் எதிர்பார்ப்புக்கு அமைவாகவே இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் அமையும் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை” என தெரிவித்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 07.00 மணியளவில் ஆரம்பித்த இந்த கருத்துக்கணிப்பு, மாலை 05.00 மணியளவில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வாக்களிக்கும் பொருட்டு சுமார் 167,140 வாக்குச்சாவடிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, இந்த கருத்துக்கணிப்பு தொடர்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, 51.5 சதவீதமானோர் தையீப் எர்டோகனுக்கு சாதகமாகவே வாக்களிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg