Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஒடிஸா மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும்: வெங்கய்ய நாயுடு

In இந்தியா
Published: 12:02 GMT, Apr 16, 2017 |
0 Comments
1221
icon_com
This post was written by : Shailu
venkaiah-naidu

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஒடிஸா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நேற்று (சனிக்கிழமை) புவனேஸ்வரத்திற்கு வருகை தந்தார். அங்கு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘மோடி தலைமையிலான மத்திய அரசு செயற்படுத்தி வரும் நலத் திட்டங்கள் அனைத்தும், ஒடிஸா மக்களுக்குச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வதற்கு தேசிய செயற்குழுக் கூட்டம் முக்கியத்துவம் கொடுக்கும்.

மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்கள், ஏழைகளின் மேம்பாட்டுக்கான கொள்கைகளை செயற்படுத்திப் பார்க்கும் சோதனைக் கூடமாக ஒடிஸா மாநிலம் மாறவிருக்கிறது.

அப்படி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் ஒடிஸாவுக்கு மிகப் பெரிய அளவில் பலன்கள் கிடைக்கும்.

மோடி தலைமையின் கீழ் பா.ஜ.க பெரும் பலத்துடன் வளர்ந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாகவே வந்துள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg