Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சிட்னி மைதானமே அவுஸ்ரேலியாவிலுள்ள மோசமான மைதானம்: கிரிக்கெட் அவுஸ்ரேலியா

In விளையாட்டு
Updated: 12:41 GMT, Apr 16, 2017 | Published: 11:51 GMT, Apr 16, 2017 |
0 Comments
1109
icon_com
This post was written by : Surenth
Sydny Gound

அவுஸ்ரேலியாவில் உள்ள மைதானங்களில் விசாலமான சிட்னி மைதானமே அவுஸ்ரேலியாவிலுள்ள மிக மோசமான மைதானம் என கிரிக்கெட் அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

அவுஸ்ரேலியாவில் இடம்பெறும் உள்ளூர் போட்டிகளில் பயனப்டுத்தப்பட்ட மைதானங்களுக்குடையிலான தரநிலைக் கணிப்பில் இந்த முடிவை கிரிக்கெட்  அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான உள்ளூர் போட்டியான ஷீப்பில்ட் ஷீல்ட் தொடரில் பங்கேற்ற அணித்தலைவர்கள், நடுவர்கள், போட்டித் தீர்ப்பாளர்கள் இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கேற்றுள்ளனர்.

மைதானத்தின் ஆடுகளம் (Pitch ), எல்லைக்கோட்டை அண்மித்த பகுதி (Out Field ) ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கணிப்பு வெளியாகியுள்ளது. மெல்போர்ன், பிரிஸ்பேன்,அடிலைட்,பேர்த் ஆகிய மைதானங்களை விடவும் சிட்னி பின் நிலையில் உள்ளது.

இந்த நிலையில், அவுஸ்ரேலியாவின் இளம் வீரர் பில் ஹியூஸ் விளையாடும் போது உயிரிழந்த மைதானமும் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg