Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்துக்கு வெள்ளி விருது

In வணிகம்
Published: 11:48 GMT, Apr 16, 2017 |
0 Comments
1112
icon_com
This post was written by : Anojkiyan
peo-p-0267f5332038bef11730f3bae07c7b2b273e23fd

இலங்கையின் வங்கி சாராத நிதித்துறையின் முன்னோடியாக திகழும் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி, அதன் சமூகப்பொறுப்புணர்வு செயற்பாடுகளின் அர்ப்பணிப்புக்காக 2016ஆம் ஆண்டுக்கான இயன் டயஸ் அபேசிங்க ஞாபகார்த்த JASTECA CSR/ Sustainability வெள்ளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கொழும்பு, கலதாரி ஹோட்டலில் 21ஆவது, வருடாந்த JASTECA விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

21 வருட காலமாக, நிலைபேணியலுமை மற்றும் வினைத்திறனை பேணி வரும் நிறுவனங்களை இனங்கண்டு கௌரவிக்கும் நடவடிக்கைகளை JASTECA முன்னெடுத்து வருகிறது. JASTECA விருதுகள் 2016இன் மூலமாக மூன்று பிரதான பிரிவுகள் இலக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதில் Taiki Akimoto ´5S´ விருது, Nagaaki Yamamoto Kaizen விருது மற்றும் இயன் டயஸ் அபேசிங்க ஞாபகார்த்த JASTECA CSR/ Sustainability விருது போன்றன அடங்கியுள்ளன.

இயன் டயஸ் அபேசிங்க ஞாபகார்த்த JASTECA CSR/ Sustainability விருது 2016 என்பது பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் மூன்று பிரதான கொள்கைகளான மக்கள், புவி மற்றும் இலாபம் ஆகியவற்றுக்கு நிறுவனம் காணப்பிக்கும் அர்ப்பணிப்பை கௌரவித்து வழங்கியிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg