Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் திடீர் கோளாறு

In இலங்கை
Updated: 05:19 GMT, Apr 17, 2017 | Published: 04:42 GMT, Apr 17, 2017 |
0 Comments
1060
icon_com
This post was written by : Ravivarman
nuraichcholai

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள முதலாவது மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை திடீர் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தற்போது மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி, மத்துகம, கொட்டுகொட, மாத்தறை, அத்துருகிரிய, சப்புகஸ்கந்த, கொஸ்கம உட்பட பல பிரதேசங்களிலேயே இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வருடத்திலும் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் பல பாகங்களில் மின்தடை ஏற்பட்டிருந்ததுடன், பல தொழிற்சாலைகள் பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg