Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடகொரிய விவகாரம்: அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஜப்பான் இணக்கம்!

In உலகம்
Updated: 10:27 GMT, Apr 17, 2017 | Published: 05:01 GMT, Apr 17, 2017 |
0 Comments
1836
icon_com
This post was written by : Sylviya

வடகொரியாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஜப்பானும் இணங்குவதாக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே (Shinzo Abe) இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடகொரியாவின் அணுவாயுத சோதனை நடவடிக்கைகளால், கொரிய தீபகற்பத்திலுள்ள மக்கள் இடம்பெயர ஆரம்பித்தால் அதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பில் ஜப்பானிய அரசும் அக்கறை காட்டி வருகின்றது.

வடகொரிய நிறுவுனர் கிம் இரண்டாம் சங்கின் 105ஆவது பிறந்தாளை முன்னிட்டு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு ஒன்றை வடகொரியா ஒழுங்கமைத்திருந்தது.

கொரிய தீபகற்பத்தின் வலிமையை அதிகரிக்கும் வகையில் அமெரிக்காவினால் போர்க்கப்பல் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டதைத் தொடர்ந்தே அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் வடகொரியா குறித்த பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பை நடத்தியது.

அத்துடன், வடகொரியாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா எதிர் தாக்குதல் நடத்துமாயின் அமெரிக்காவுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தப்படும் என கடந்த வெள்ளிக்கிழமை வடகொரியா அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg