Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இராணுவ கட்டுப்பாடற்ற எல்லையை நேரில் பார்வையிட்டார் அமெரிக்க துணை ஜனாதிபதி

In உலகம்
Published: 05:30 GMT, Apr 17, 2017 |
0 Comments
1356
icon_com
This post was written by : Sylviya

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் (Mike Pence), வடகொரியா மற்றும் தென்கொரியாவுக்கு இடையிலுள்ள இராணுவ கட்டுப்பாடற்ற எல்லையை நேரில் பார்வையிட்டுள்ளார்.

ஆசிய நாடுகளுக்கு செல்லும் பொருட்டு 10 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பென்ஸ், குறித்த எல்லையை இன்று (திங்கட்கிழமை) பார்வையிட்டுள்ளார்.

வடகொரியாவின் மிலேச்சத்தனமாக செய்கைகள் தொடர்பில் அமைதி காத்து வந்த காலம் மாறிவிட்டது என முன்னதாக அமெரிக்கா தெரிவித்திருந்ததை தொடர்ந்து, பென்ஸ் தென்கொரியாவுக்கான தனது விஜயத்தை நேற்று ஆரம்பித்திருந்தார்.

பென்ஸின் ஆசிய சுற்றுப்பயணத்தின் போது அவர் நான்கு நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கி வரும் நாடுகளுக்கு ட்ரம்ப் நிர்வாகம் உதவி செய்யத் தவறாது என்பதை உணர்த்தும் வகையிலேயே பென்ஸின் குறித்த விஜயம் அமைந்துள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகொரியா மற்றும் தென்கொரியாவுக்கு இடையில் உள்ள இராணுவமற்ற பகுதியில், எண்ணற்ற கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் இரு நாட்டு படைவீரர்களும் அவர்களின் நாட்டு எல்லைகளில் இருந்து 24 மணி நேரமும் மிகுந்த அவதானத்துடன் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg