Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

2017 ஃபோர்முலா-1 கார் பந்தயம்: ஜெர்மனியின் செபஸ்டியனுக்கு முதலிடம்

In விளையாட்டு
Published: 05:40 GMT, Apr 17, 2017 |
0 Comments
1063
icon_com
This post was written by : Shailu

2017ஆம் ஆண்டுக்கான ஃபோர்முலா-1 கார் பந்தயத்தின் 3ஆவது சுற்று போட்டியில், ஜெர்மனியின் முன்னாள் சம்பியன் செபஸ்டியன் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஃபோர்முலா-1 கார் பந்தயம் 20 சுற்றுகளாக நடத்தப்படுகின்ற நிலையில், இதன் 3ஆவது சுற்றுப் போட்டி பக்ரைன் கிராண்ட்பிரி சகிர் ஓடுதளத்தில் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

இதில் முன்னாள் சம்பியனான ஜெர்மனியின் செபஸ்டியன் வெட்டல் 1 மணி மற்றும் 33 நிமிடங்கள் 53.374 வினாடிகளில் இலக்கை கடந்து, முதலிடத்திற்குரிய 25 புள்ளிகளை பெற்றார்.

அவரை விட 6.6 வினாடிகள் மட்டுமே பின்தங்கிய நிலையில், இங்கிலாந்தின் லீவிஸ் ஹெமில்டன் 2ஆவது இடத்தையும், பின்லாந்து வீரர் வோல்டெரி போட்டாஸ் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

அந்தவகையில், இதுவரை இடம்பெற்ற 3 சுற்று போட்டிகளின் முடிவில் வெட்டல் 68 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹெமில்டன் 61 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.  4ஆவது சுற்று போட்டி ரஷ்யாவில் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg