Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவரைத் தேடும் வேட்டை தொடர்கிறது (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 07:40 GMT, Apr 17, 2017 | Published: 05:46 GMT, Apr 17, 2017 |
0 Comments
2954
icon_com
This post was written by : Ravivarman
sri-lanka-luxury-holiday-houses-villas-apartments-private-beachfront-escape-2355-hikkaduwa.27373.904x505

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜெயந்தன் படையணியின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளாரா என்பது குறித்து தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக பாதுகாப்புத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற அந்த அணியைச் சேர்ந்த நபர்கள் தென்னிந்தியா போன்ற இடங்களில் இருந்து மீண்டும் நாட்டுக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்துள்ளனரா என்பது பற்றி தாம் பல கோணங்களில் புலனாய்வு செய்து வருவதாக பாதுகாப்புத் தரப்புச் செய்திகள் கூறுகின்றன.

குறிப்பாக மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளியைச் சேர்ந்த ஜெயந்தன் படையணியில் தலைமைத்துவம் வகித்த முக்கிய நபர் ஒருவர் நடமாடுவதாகக் கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்புத் தரப்பினர் உஷாரடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் படகு மூலம் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக தகவல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட புலனாய்வுப் பிரிவு தலைவர்களில் ஒருவர் படகு மூலம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார் என சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பு சந்திவெளி பகுதிக்கான புலிகளின் புலனாய்வு பிரிவு தலைவராகவும், ஜெயந்தன் படையணியின் தலைவர்களில் ஒருவராகவும் கடமையாற்றிய ஜெயந்தன் எனப்படும் மோகனதாஸ் என்பவரே இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜெயந்தனின் வருகை தொடர்பில் பாதுகாப்பு பிரிவிற்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் இது குறித்து புலனாய்வுப் பிரிவினரின் நடவடிக்கைகள் மிகவும் மந்தமாக காணப்பட்டுள்ளதாகவும்  குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மீனவ படகு ஒன்றின் மூலம் இவர் மன்னார் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளாகவும் மன்னாரில் புதைத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் ஒரு தொகை பணத்தை எடுத்துச் செல்லும் நோக்கத்தில் இவர் வந்திருக்கலாம் எனவும் மேற்படி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg