Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நேபாள ஜனாதிபதிக்கு டெல்லியில் மகத்தான வரவேற்பு (2ஆம் இணைப்பு)

In இந்தியா
Published: 06:27 GMT, Apr 17, 2017 |
0 Comments
1261
icon_com
This post was written by : Shailu

நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பாண்டரி அரசு முறை பயணமாக  இன்று (திங்கட்கிழமை) இந்தியா வந்தடைந்துள்ளார். டெல்லிக்கு வருகை தந்துள்ள அவருக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேபாள ஜனாதிபதியுடன் அந்நாட்டின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளும் வருகை தந்துள்ளனர்.

நேபாளத்தில் தங்கியுள்ள மாதேசி இன மக்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற கலவரம் மற்றும் வன்முறைக்கு பின்னர் நேபாள ஜனாதிபதி டெல்லிக்கு வருகை தந்துள்ளதால், இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நேபாள ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம்

 

நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பாண்டரி (Bidya Devi Bhandari ) 5 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்.

நேபாள ஜனாதிபதியாக பித்யா தேவி பாண்டாரி பொறுப்பேற்றதன் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

இந்த பயணத்தின் போது பாண்டாரி, பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேபாள ஜனாதிபதியின் வருகையால், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு, வரலாற்று- கலாசார இணைப்புகள் வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குஜராத் மற்றும் ஒடிசா மாநிலங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு செல்லவுள்ள நேபாள ஜனாதிபதி, அங்கு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg