Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குஜராத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது மும்பை அணி!

In கிாிக்கட்
Updated: 06:27 GMT, Apr 17, 2017 | Published: 06:05 GMT, Apr 17, 2017 |
0 Comments
1266
This post was written by : Surenth

மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் குஜராத் லயன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

வான்கடே மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது வெற்றியை பதிவு செய்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்களை பெற்றது.

குஜராத் அணியின் துடுப்பாட்டத்தில், மெக்கலம் 66 ஓட்டங்களையும் தினேஷ் கார்த்திக் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

177 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 177 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மும்பை அணி சார்பில், ராணா 36 பந்துகளில் 53 ஓட்டங்களையும் பொல்லார்ட் 23 பந்துகளில் 39 ஓட்டங்களையும் பட்லர் 26 ஓட்டங்களையும் அணித்தலைவர் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg