Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெங்களூர் அணியை தோற்கடித்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது புனே அணி

In கிாிக்கட்
Updated: 07:57 GMT, Apr 17, 2017 | Published: 07:27 GMT, Apr 17, 2017 |
0 Comments
1215
This post was written by : Surenth

ஐ.பி.எல். தொடரின் 17ஆவது போட்டியில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்ட ரைசிங் புனே சுப்பர் ஜெய்ன்ட் அணி, 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

10ஆவது ஐ.பி.எல். தொடரின் 12 ஆவது நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புனே அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய புனே அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

புனே அணியின் துடுப்பாட்டத்தில் திரிபதி 31 ஓட்டங்களையும் ரஹானே 30 ஓட்டங்களையும் ஸ்மித் 28 ஓட்டங்களையும் டோனி 27 ஓட்டங்களையும் மனோஜ் திவாரி 11 பந்துகளில் 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

162 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ஓட்டங்களைப் பெற்று 27 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

பெங்களூர் அணியின் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் கோஹ்லி 19 பந்துகளில் 28 ஓட்டங்களையும் கேதர் ஜாதவ் 18 ஓட்டங்களையும் வொட்சன் 14 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

புனே அணியில் பென்ஸ் ஸ்டோக் சிறப்பான முறையில் பந்துவீசி 4 ஓவர்களில் 18 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்டுகளையும், தாகூர் 3 விக்கெட்டுகளையும் உனட்கட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக, சிறந்த முறையில் பந்து வீசிய புனே அணியின் பென்ஸ் ஸ்டோக் தெரிவு செய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg