Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி முறியடித்தது

In கிாிக்கட்
Updated: 09:45 GMT, Apr 17, 2017 | Published: 08:04 GMT, Apr 17, 2017 |
0 Comments
2630
This post was written by : Surenth

ஐ.பி.எல். தொடரில் அதிக வெற்றிகளைப் பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சாதனையை முறியடித்து, மும்பை இந்தியன்ஸ் அணி புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.

குஜராத் லயன்ஸ் அணியை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தோற்கடித்ததன் மூலம் 95 வெற்றிகளை பெற்ற அணி என்ற புதிய சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது.

ஐ.பி.எல். தொடரில் 94 வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பெற்றிருந்தது.

இந்த நிலையில், ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு லோதா குழுவால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, கடந்த இரண்டு வருடங்களும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி விளையாடாத காரணத்தால், சிறந்த முறையில் விளையாடி வெற்றி பெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சாதனையை பதிவு செய்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg