Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளை மாளிகைக்கு திரும்பினார் டொனால்ட் ட்ரம்ப்

In
Updated: 12:08 GMT, Apr 17, 2017 | Published: 07:58 GMT, Apr 17, 2017 |
0 Comments
1441
This post was written by : Sylviya

ஃபுளோரிடா மாநிலத்திலிருந்து ஜொயின்ட் பேஸ் அன்ரூஸ் (Joint Base Andrews) எனும் இராணுவ விமானதளத்தை வந்தடைந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அங்கிருந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபுளோரிடாவில் உள்ள கடற்கரையோர மாளிகையில் வார இறுதி நாட்களை கழித்த ட்ரம்ப், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்ட ஈஸ்டர் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு மெலனியாவுக்கும் ட்ரம்பிற்கும் திருமணம் நடைபெற்ற தேவாலயத்தில் நடத்தப்பட்ட ஈஸ்டர் திருப்பலியில் ட்ரம்ப் கலந்துகொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை,  ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ஈஸ்டர் எக் ரோல் (Easter Egg Roll) என அழைக்கப்படும் பாரம்பரிய விளையாட்டை வெள்ளை மாளிகை இன்று  ஒழுங்கமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg