Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மூன்று மாத பச்சிளம் பாலகனுக்கு தீவிரவாதத்துடன் தொடர்பு?

In
Updated: 10:05 GMT, Apr 17, 2017 | Published: 08:44 GMT, Apr 17, 2017 |
0 Comments
1614
This post was written by : Sylviya
09

பிரித்தானியாவைச் சேர்ந்த மூன்று மாதங்களே நிரம்பிய பச்சிளம் பாலகன் ஒருவனுக்கு தீவிரவாதத்துடன் தொடர்பில்லை என்பதை உறுதிசெய்வதற்காக, குறித்த பாலகனுக்கு லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம் அழைப்பு விடுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த குழந்தையின் பாட்டன் அமெரிக்க விசா விலக்கு படிவத்தை (US visa waiver form) நிரப்பும் போது “தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் உங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதா அல்லது தீவிரவாத நடவடிக்கையொன்றில் ஈடுபடும் எண்ணம் உங்களுக்கு உண்டா?” எனும் கேள்விக்கு தவறுதலாக “ஆம்” என நிரப்பியமை காரணமாகவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த குறித்த குழந்தையின் 65 வயதுடைய பாட்டன், “இது தவறுதலாக ஏற்பட்டதொன்று என்பது எல்லோருக்கும் புரிகின்றது. எனினும் இது போன்று குழந்தைக்கு அழைப்பு விடுத்திருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg